- Advertisement -
சமீபத்தில் சினிமா தயாரிப்பாளர் துபாயை சேர்ந்த கண்ணன் ரவி இல்ல திருமண விழா நடந்தது. இதில் மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் மனைவி மற்றும் மகள் இந்திரஜா மற்றும் மருமகன் கார்த்திக் ஆகியோர் கலந்துக்கொண்டனர். அப்போது மேடையில் இருந்த கண்ணன் ரவி அருகே ரோபோ சங்காின் மருமகன் கார்த்திக் சென்று கைகுலுக்க முற்பட்டார். ஆனால் அதை கண்டுக்கொள்ளாத கண்ணன் ரவி, அவரை அலட்சியப்படுத்தினார். இந்த வீடியோ கிளிப் இணையத்தில் வைரலான நிலையில், மதியாதோர் தலைவாசல் மிதிக்கலாமா? என்று ரசிகர்கள் கோபமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.





