- Advertisement -
ஒரு நேர்காணலில் அரசன் படம் குறித்து பேசிய திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது, அரசன் படப்பிடிப்பில் சிலம்பரசனையும் வெற்றிமாறனையும் சந்தித்து பேசினேன். அப்போது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அரசன் படத்தை வெளியிடலாம் என்று கூறினேன். ஆனால் படத்தை மிகச் சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே வெற்றிமாறன் சிலம்பரசன் அனிருத் ஆகியோர் கடுமையாக உழைத்து வருகின்றனர். நடிகர் சிலம்பரசனால் படப்பிடிப்பு தாமதமாவதாக பரப்பப்படும் செய்திகள் உண்மை அல்ல. அவர் முழுமூச்சுடன் நடித்து கொடுக்க தயாராக தான் இருக்கிறார் என்று திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருக்கிறார்.





