- Advertisement -
Homeபொழுதுபோக்குசீட்டாட்டத்தில் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருந்த கேப்டன் விஜயகாந்த் - காரணம் கேட்டு அசந்து போன இயக்குனர்...

சீட்டாட்டத்தில் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருந்த கேப்டன் விஜயகாந்த் – காரணம் கேட்டு அசந்து போன இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்!

- Advertisement -

திரைப்பட இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் ஒரு நேர்காணலில் கூறியதாவது, உதவி மரியாதை எளிமைக்கு உதாரணம் விஜயகாந்த். ஊட்டியில் ஷூட்டிங். அவருக்கு பைவ் ஸ்டார் ஓட்டல்ல ரூம் போட்டுட்டோம். மத்தவங்களுக்கு சின்ன ஓட்டலில் ரூம் போட்டுட்டோம். ஷூட்டிங் முடிஞ்ச பிறகு டச்சப் பாய் மேக்கப் மேன் டிரைவர் லைட்பாய் அப்புறம் செட்டுல வேலை பார்த்த எல்லாரையும் டேய் எல்லாரும் என்னோட ரூமுக்கு வந்துடுங்கன்னு சொல்லிட்டார். வந்தவுடனே எல்லாரையும் கூட்டிட்டு போய் அவர் படுக்கற பெட்ல ஊட்கார வெச்சு எல்லோரும் சீட்டு விளையாடறாங்க. ஆனால் ஒரு நாள் கூட விஜயகாந்த் ஜெயித்தது இல்லை. தோத்துக்கிட்டே இருப்பார். ஏன்னு கேட்டா, சும்மா கொடுத்தா தானம்ன்னு சொல்லுவாங்க. நான் தோத்துக்கிட்டே இருக்கணும். அவங்களுக்கு கொடுத்துக்கிட்டே இருக்கணும் என்று சொல்வார். எந்த நடிகருக்கு இப்படி மனசு வரும்? என்று எஸ்ஏ சந்திரசேகர் கூறியிருக்கிறார்.

சற்று முன்