- Advertisement -
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடிக்கும் ஆர்சி 17 படம் விரைவில் உருவாகிறது. ராம்சரண் – சுகுமார் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் இது. இந்த படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இன்னும் கதாநாயகி மற்றும் இசையமைப்பாளர் குறித்த விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை. ஆர்.சி 17 படத்திற்காக ராம்சரண் தலையில் குடுமி மற்றும் ஒல்லியான உடல் அமைப்புடன் காட்சி தருகிறார். முனிவர் போன்ற தாடி மற்றும் நீண்ட முடியுடன் அவரது உருவமாற்றம் மிகவும் வியக்கும் வகையில் உள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இந்த நிலையில் படத்தின் கதாநாயகி தேர்வு இன்னும் நிலுவையில் உள்ளது. 3 நடிகைகள் தேர்வு பட்டியலில் இருப்பதாகவும் அதில் ஒருவர் சாரா அர்ஜூன் என்றும் கூறப்படுகிறது.





