- Advertisement -
Homeபொழுதுபோக்குபடப்பிடிப்பு தளத்தில் ஜாலியாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் - அப்படி யாராவது பேசினால் உடனே...

படப்பிடிப்பு தளத்தில் ஜாலியாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் – அப்படி யாராவது பேசினால் உடனே எஸ்கேப் தான் – தலைவர் எப்பவுமே தலைவர் தான்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தனது படங்களில் நடிக்கும் போது படப்பிடிப்புத் தளங்களில் இடைவேளை நேரங்களில் சக நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் அமர்ந்து ஜாலியாகப் பேசிச் சிரிப்பது வழக்கம். அந்த அரட்டைகளில் ரஜினியும் காமெடியாக பேசி சிரிப்பார். ஆனால் அந்தப் பேச்சு எல்லை மீறினால் ரஜினியின் அணுகுமுறை முற்றிலும் மாறிவிடும். குறிப்பாக அங்கு இல்லாத ஒருவரைப் பற்றி மற்றவர்கள் குறை கூறி பேசினால் அந்த உரையாடலில் ஒருபோதும் ரஜினி பங்கேற்க மாட்டார். முதலில் அமைதியாகக் கண்களை மூடிக்கொண்டு தூங்குவது போலச் சாய்ந்து அமர்ந்திருப்பார். சிறிது நேரம் காத்திருந்து கவனிப்பார். அப்படியும் தொடர்ந்து அங்கு சிலர் புறம் பேசிக்கொண்டிருந்தால் உடனே எக்ஸ்கியூஸ் மீ” என்று கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு எழுந்து சென்றுவிடுவதுதான் ரஜினியின் பண்பு என்று கூறப்படுகிறது.

சற்று முன்