- Advertisement -
ஜெயம் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி உனக்கும் எனக்கும் தனி ஒருவன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் மோகன் ராஜா. நடிகர் ரவி மோகனின் அண்ணன்தான் இவர். இந்த நிலையில் தற்போது நடிகராக அதுவும் வில்லனாக சினிமாவில் களமிறங்கியுள்ளார். எல்கே சுதீஷ் எம்பி தயாரிப்பில் இயக்குனர் திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன் ஷிவானி ராஜசேகர் நடிக்கும் வாணவேடிக்கை படத்தில் வில்லனாக மோகன் ராஜா அறிமுகம் ஆகிறார். இப்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் மோகன்ராஜா வானவேடிக்கை படம் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்திருக்கிறார்.





