- Advertisement -
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது, போதைப்பொருள் ஊழல் பக்கம் போயிடாதீங்க. கொஞ்சம் ஃபன் என்ஜாய்மென்ட் ஓகே. பட் அடிமையாகாதீங்க என சிஎம் விஜய் கேஷூவலாக பேசி இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. முதல்வர் என்கிற பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு மாணவர்களிடம் இப்படியா பேசுவது? இதுபோன்ற ஒரு அறிவுரையை தனது வாரிசுகளுக்கு வழங்குவாரா? இது சினிமா சூட்டிங்கோ அல்லது ஆடியோ லான்ச் மேடையோ அல்ல ஜோசப் விஜய் அவர்களே. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார்.





