- Advertisement -
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ் கூறியதாவது, இது கூட்டம் இல்லை. என்னோட குடும்பம். என் அசுர குடும்பம். நம்ம பசங்க இந்த இண்டர்நெட்ல அவதூறு பேசிக்கிட்டு வதந்திகளை பரப்பிக்கிட்டு மேல இருக்கறவங்களை கீழே இறக்கிட்டு நெகட்டிவிடி ஸ்பிரட் பண்றது, டாக்ஸிக் ஸ்பிரட் பண்றது அந்த மாதிரி பண்ற பசங்க கிடையாது. களத்துல இறங்கி களை கட்டற பசங்க. அன்பை பகிர்ற பசங்க அன்பே சிவம் என்கிற பாதையில் போற பசங்க என்று நடிகர் தனுஷ் பேசியிருக்கிறார். ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் அவதூறுகளும் வதந்திகளும் பரப்பி ஆட்சி நடத்துவதாக டிவிகே மீது விமர்சனம் உள்ள நிலையில் டிவிகே குறித்து மறைமுகமாக தாக்கி நடிகர் தனுஷ் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.





