- Advertisement -
தமிழ் சினிமாவில் தவமாய் தவமிருந்து பொக்கிஷம் சத்தம் போடாதே மிருகம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பத்மபிரியா. 2017ம் ஆண்டுக்கு பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட பத்மபிரியா தற்போது மீண்டும் மலையாள சினிமாவில் அவர் நடிக்க துவங்கி இருக்கிறார். மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் பத்மபிரியா படப்பிடிப்பின் போது மேலே இருந்து கீழே குதிக்கும் ஒரு காட்சியில் தடுமாறி தவறி கீழே விழுந்தார். அவரது காலில் தசை நாரில் பலத்த அடிபட்டு சேதம் அடைந்துள்ளது. ஒரு மாதத்திற்கு மேலாக படுத்த படுக்கையாக அவர் இருக்க வேண்டிய நிலையில் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து நான் பயப்படவில்லை. மிக விரைவில் குணமடைந்து விடுவேன் என்று நடிகை பத்மபிரியா நம்பிக்கையாக வீடியோ ஒன்றில் கூறியிருக்கிறார்





