- Advertisement -
இராமாயணம் படத்தில் சாய் பல்லவி ஏற்றுள்ள சீதை கதாபாத்திரம் உருவகப்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்து பிரபல இந்தி நடிகர் முகேஷ் கண்ணா கடுமையான விமர்சித்துள்ளார். வால்மீகி ராமாயணத்தில் சீதை சண்டையிடுவது போன்ற நிகழ்வுகள் எங்குமே இல்லை, நான் படித்த மற்றும் அறிந்த வரையில் சீதை எவருடனும் சண்டையிட்டதில்லை. மரியாதா புருஷோத்தமரான ராமனின் மனைவி என்றும், மிகுந்த பக்தி கொண்டு தன் கணவருடன் 14 ஆண்டுகள் வனவாசத்திற்கு மனமுவந்து உடன் சென்றவர் சீதையின் குணாதிசயத்தை மாற்றி அவரை ஒரு போராளியாகச் சித்தரிப்பது சரியல்ல, அவர் ஒரு போராளியாக இருந்திருந்தால் அப்போதே ராவணனுடன் சண்டையிட்டிருக்கலாமே தவிர, அவ்வளவு எளிதாகக் கடத்தப்பட்டிருக்க முடியாது என்றும் விமர்சித்துள்ளார்.





