- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரஸ்மீட்டுல விஜய் ஏன் அப்படி கத்தினார்ன்னு தெரியுமா? போக்கிரி படம் நடந்த அந்த சம்பவம் -...

பிரஸ்மீட்டுல விஜய் ஏன் அப்படி கத்தினார்ன்னு தெரியுமா? போக்கிரி படம் நடந்த அந்த சம்பவம் – விளக்கம் தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி

- Advertisement -

கடந்த 2007ம் ஆண்டில் நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் விஜய் அசின் வடிவேலு உள்ளிட்டோர் நடித்த போக்கிரி படம் வெளியானது. அந்த படத்தின் பிரஸ்மீட்டில் விஜய் கோபமாக கத்தியது அன்று சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறியதாவது, விஜய் நடத்திய அந்த பிரஸ் மீட்டில் என்ன நடந்தது என்று எனக்கு புரிந்தது. கல்யாண மண்டபத்தில் நிகழ்ச்சி முடிஞ்சதும் போட்டிருந்த இரும்பு சேர்களை எல்லாம் தரையில் இழுத்து எடுத்துட்டு போய் இருக்காங்க. அந்த சத்தம் தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருந்திருக்கு. ஆனால் அந்த சத்தம் மைக்கில் பதிவாகவில்லை. அதனாலதான் விஜய் டென்ஷன்ல சைலண்ட் இருக்கச் சொல்லுன்னு சொல்லி கத்தி இருந்தார். அவர் எப்போதுமே ரொம்ப சாந்தமாகவும் அமைதியாகவும் இருக்கிற ஆளு என்று விஜய் 19 ஆண்டுகளுக்கு முன்பு கத்தியது குறித்து இப்போது ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் அளித்திருக்கிறார்

சற்று முன்