- Advertisement -
கேஜிஎஃஎப் படங்களை தொடர்ந்து யஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான படம் டாக்ஸிக். ஆனால் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால் சமீபத்தில் ரிலீஸான இராமாயணா படத்தில் இராவணன் கேரக்டரில் யஷ் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நடிகர் யஷ் சமீபத்தில் தமிழ் இயக்குனர் ஒருவரை சந்தித்து கதை கேட்டதாகவும் அவருடன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை தற்போது ஆரம்ப கட்டத்தில் மட்டுமே உள்ளது. மிக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





