- Advertisement -
Homeபொழுதுபோக்குஇத்தனை தொழில்நுட்பம் சினிமாவில் இருந்து என்ன பயன்? வன்முறை போதைப்பொருள் கடத்தல்தான் உங்கள் கதைக்களமா? -...

இத்தனை தொழில்நுட்பம் சினிமாவில் இருந்து என்ன பயன்? வன்முறை போதைப்பொருள் கடத்தல்தான் உங்கள் கதைக்களமா? – இயக்குனர்களை கடுமையாக விமர்சித்த தங்கர்பச்சான்!

- Advertisement -

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் தங்கர்பச்சான் கூறியதாவது, மக்களின் வாழ்க்கையை பேசுவதற்கான கலைதான் திரைப்படம். ஆனால் இன்றைக்கு நம்மிடம் இருக்கும் நவீன கேமராக்கள் ஒளி ஒலி உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பெரும்பாலும் வன்முறையை காட்சிப்படுத்தவும் போதை பொருள் கடத்தல் மது அருந்துதல் போன்றவற்றை விதவிதமாக காட்டவும் தான் உதவுகிறது. அப்படிப்பட்ட படங்கள் எத்தனை கோடி வசூல் செய்கின்றன என்று தொடர்ந்து சொல்கிறோம். அந்த பணத்தால் சமூகத்திற்கு என்ன பயன்? மீண்டும் மீண்டும் அதே போன்ற படங்களை தான் உருவாக்குகிறார்கள். அதற்கு பதிலாக மக்களின் உறவுகளையும் அன்பையும் பேசக்கூடிய நல்ல திரைப்படங்கள் கவனிக்கப்பட வேண்டும்; கொண்டாடப்பட வேண்டும் என்று இயக்குனர் தங்கர்பச்சான் பேசியிருக்கிறார்.

சற்று முன்