- Advertisement -
Homeபொழுதுபோக்குகுழந்தைகளின் உலகம் திருடப்பட்டு விட்டது, தங்களது மகிழ்ச்சியை கைபேசிகளில் குழந்தைகள் தேடிக்கொண்டு இருக்கின்றனர் - இயக்குனர்...

குழந்தைகளின் உலகம் திருடப்பட்டு விட்டது, தங்களது மகிழ்ச்சியை கைபேசிகளில் குழந்தைகள் தேடிக்கொண்டு இருக்கின்றனர் – இயக்குனர் தங்கர்பச்சான் வேதனை!

- Advertisement -

சென்னையில் நடந்த அப்பாக்குட்டி பட விழாவில் இயக்குனர் தங்கர்பச்சான் பேசியதாவது, இன்றைய மனித வாழ்க்கை உறவுகளைக் கடந்து பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறது. நாம் நேசிப்பவர்களுடன் 5 நிமிடங்கள் அமர்ந்து பேசக்கூட நேரமில்லாமல் கைபேசியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் அப்பாகுட்டி போன்ற படங்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியம். குறிப்பாக குழந்தைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் உலக அளவில் குறைந்து விட்டன. குழந்தைகளின் உலகமே அவர்களிடமிருந்து திருடப்பட்டு விட்டது மண்ணையும் நீரையும் உணவையும் காற்றையும் மாசுபடுத்தி விட்டோம். குழந்தைகள் தங்களுடைய மகிழ்ச்சியை பெற்றோரின் கைபேசிகளில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டிலும் குழந்தைகளை எப்படி நடத்துகிறோம்? அவர்களுக்கு அன்பு எங்கே கிடைக்கும்? என்று இயக்குனர் தங்கப்பச்சான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சற்று முன்