- Advertisement -
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது, வெறும் வாயில் வடை சுடுவதையும் விளம்பர ரீல்ஸ் வெளியிடுவதையும் நிறுத்திவிட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும். 140 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கும் தகவல் தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் புழக்கம் எந்த அளவுக்கு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளது என்று டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.





