சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்ஜே சூர்யா கூறியதாவது, என் அப்பாவோட பெயர் சம்மனசு பாண்டியன். என்னுடைய பெயர் ஜஸ்டின். இயக்குனர் வசந்த் சார் உன்னோட பேர் என்னடான்னு கேட்டார். ஜஸ்டின் சார் அப்படின்னு சொன்னேன். ஜஸ்டின் பைட் மாஸ்டர் பெயர்டா, உன்னை எப்படிடா ஜஸ்டின்னு கூப்பிடறது? சரி உனக்கு பிடிச்ச 10 பேர் எழுதிட்டு வா அப்படின்னு சொன்னார். வசந்த் சாருக்கு மணிரத்னம் சார் படத்திலிருந்து எதுவாக இருந்தாலும் பிடிக்கும். அதனால அவருடைய படத்துல இருக்கிற ஹீரோ பெயர் எழுதிட்டு போய் காட்டினேன். அதுல தளபதி படத்துல ரஜினி சார் பெயர் சூர்யா. அதையும் எழுதியிருந்தேன். சூர்யா இனிமே இதுதான் உன்னுடைய பெயர் என்று சொன்னார். என் அப்பா பேர்ல எழுந்த எஸ்சையும் என் பேர்ல இருந்த ஜேவையும் எடுத்து எஸ்ஜே சூர்யா என்று வெச்சுக்கிட்டேன் என்று அவர் கூறியிருக்கிறார்.





