- Advertisement -
நேர்காணல் ஒன்றில் பேசிய திரைப்பட நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறியதாவது, கடன் உங்களை யோசிக்க விடாது. ஒரு அடிமை வாழ்க்கை வாழ வெச்சுடும். 10 மாடி கட்டிடம் வச்சிக்கிட்டு கடன்காரனா இருக்கிறது பணக்கார வாழ்க்கை இல்லை. கடன் வாங்கிட்டால் அதுக்காகவே ஓடணும். நினைச்சா லீவு எடுக்க முடியாது. ஒரு வேலை பிடிக்கலைன்னா கூட அதை பண்ண வேண்டியதா இருக்கும். இப்படி ஏகப்பட்ட சமரசம் பண்ணனும். நாலு பேரு பெருமையா நினைக்கணும் என்று கடன் மட்டும் வாங்கிடாதீங்க. கஞ்சியோ கூழோ இருக்கறதை குடிச்சிட்டு நிம்மதியா வாழ்வது ரொம்ப நல்ல வாழ்க்கை என்று விஜய் ஆண்டனி அட்வைஸாக கூறியிருக்கிறார்.





