- Advertisement -
சமீபகாலமாக கார்த்தி நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. குறிப்பாக வா வாத்தியார் மற்றும் சர்தார் 2 ஆகிய இரண்டு படங்கள் எதிர்பார்த்த வெற்றியை நடிகர் கார்த்திக்கு தரவில்லை. இந்த நிலையில் அடுத்த ஆண்டு 2027 கார்த்திக்கு மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் கார்த்தி 30 மற்றும் மார்ஷல் ஆகிய 2 மாறுபட்ட கதைகளங்கள் கொண்ட படங்கள் அவருக்கு பலமான கம்பேக் கொடுக்குமா என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த 2026 ஆண்டு அண்ணன் சூர்யாவுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது போல் அடுத்த ஆண்டு அவரது தம்பி கார்த்திக்கு சக்சஸ்புல் ஆண்டாக அமைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.





