- Advertisement -
நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது சேயோன் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. வரும் 2027 ஜனவரி முதல் சிபி சக்கரவர்த்தி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் எஸ்கே 27 படப்பிடிப்பையும் இணைந்து மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். இந்த 2 படங்களிலும் ஒரே காலகட்டத்தில் நடிக்கவும் சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.





