- Advertisement -
Homeபொழுதுபோக்கு2031ம் ஆண்டில் தனுஷ்தான் தமிழ்நாட்டில் முதல்வரா? ஓம் படம் ரிலீஸில் ரசிகர்கள் காட்டிய உற்சாகம்!

2031ம் ஆண்டில் தனுஷ்தான் தமிழ்நாட்டில் முதல்வரா? ஓம் படம் ரிலீஸில் ரசிகர்கள் காட்டிய உற்சாகம்!

- Advertisement -

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிகை சாய் பல்லவி நடித்த ஓம் படம் இன்று வெளியானது. இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் மதுரையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் தனுஷ் ரசிகர்கள் வைத்துள்ள பேனர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேனரில் வாகன பதிவு எண்ணை போல டிஎன் 58 சிஎம் 2031 என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இயக்கத்தின் முதல்வரே என்ற வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது. நடிகர் தனுஷ் அரசியலில் ஈடுபடுவதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டி வருவதாக பேசப்படும் நிலையில் 2031ம் ஆண்டில் அவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரவேண்டும் என்று விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த பேனர்களை ரசிகர்கள் வைத்துள்ளனர். இது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி தவெக கட்சியினரை அப்செட் செய்துள்ளது.

சற்று முன்