- Advertisement -
மலையாள நடிகர் துல்கர் சல்மான் நட்சத்திர நடிகராக ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறார். சீதாராமம் லக்கி பாஸ்கர் வரிசையில் தற்போது வெளியாகி உள்ள ஆகாசம்லோ ஒக தாரா என்ற படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்திருக்கிறார். தேவையற்ற பில்டப் சண்டை மற்றும் நடன காட்சிகள் இல்லாமல் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் இந்த படம் அவருக்கு பெரிய வசூலையும் நல்ல வரவேற்பையும் பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த சக்சஸ் பார்மூலா தமிழ்பட ஹீரோக்களுக்கு பிடிக்காததால் தொடர்ந்து தோல்வி படங்களை தருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





