- Advertisement -
சினிமாவில் காமெடி செய்து சிரிக்க வைத்தது மட்டுமின்றி நல்ல சமூக கருத்துகளை கூறி மக்களை சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். அதனால் அவரை சின்ன கலைவாணர் என்று ரசிகர்கள் அழைத்தனர். சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி முன்னாள் ஜனாதிபதி மீது அபரிமிதமான அன்பும் மரியாதையும் கொண்ட நடிகர் விவேக், கிரீன் கலாம் என்ற அமைப்பை உருவாக்கி தமிழ்நாடு முழுவதும் 1 கோடி மரக்கன்றுகளை நட்டு பசுமை புரட்சி செய்ய முயற்சிகளை மேற்கொண்டார். 2010ம் ஆண்டு முதல் 2021 வரை 11 ஆண்டுகளில் 37 லட்சம் மரக்கன்றுகளை விவேக் நட்டுள்ளார். அவரது மறைவுக்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளில் அவரது மனைவி 80 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





