- Advertisement -
மும்பையில் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கோவை ஈஷா யோக மையம் நிறுவனம் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி சுவாரசியமாக பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது அருகில் நிற்கும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆனந்த் அம்பானியின் தோளை தொட்டு ஏதோ சொல்கிறார். அதற்கு ஆனந்த் அம்பானி, நான் இவருடன் பேசிக்கொண்டு இருக்கிறேன் அல்லவா? ஏன் குறுக்கீடு செய்றீங்க? வாயை மூடிக்கொண்டு நில்லுங்க என்று கூறியபடி அதை சைகையாகவும் செய்து காட்டுவார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷாருக்கான், அங்கிருந்து நகர்ந்து மற்றவர்களுடன் பேசுகிறார். இணையத்தில் வைரலான இந்த வீடியோவை பார்த்த ஷாருக்கான் ரசிகர்கள், ஆனந்த் அம்பானியை விமர்சித்து ஆவேசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.





