- Advertisement -
நாகூர் தர்கா 470வது கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் வைபவத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் பங்கேற்றார். அங்கு ஆட்டோவில் வந்து வழிபட்ட ஏஆர் ரகுமானை கண்ட ரசிகர்கள் முண்டியடித்து சுற்றி வளைத்தனர். அவருடன் செல்போன்களில் செல்ஃபி புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க போட்டி போட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.





