- Advertisement -
Homeபொழுதுபோக்குரயிலில் பயணித்தால் எம்ஜிஆர் அதை கண்டிப்பாக செய்வார் - மறைந்த நடிகர் ராஜேஷ் சொன்ன உண்மை...

ரயிலில் பயணித்தால் எம்ஜிஆர் அதை கண்டிப்பாக செய்வார் – மறைந்த நடிகர் ராஜேஷ் சொன்ன உண்மை சம்பவம்!

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ராஜேஷ் கூறியதாவது, எம்ஜிஆர் ரயிலில் பயணிக்கிறார் என்றால் அவர் பயணிக்கும் பெட்டிக்கு எத்தனை டிடிஆர் வந்து செல்வார்கள், எத்தனை பேர் அங்கு இருப்பார்கள் என்று கணித்து விடுவார். கூடுதலாக 10 20 பேர் சாப்பிடுகிற அளவுக்கு பெரிய டிபன் பாக்ஸ்களில் சாப்பாடு டிபன் கொண்டு வந்து விடுவார். ரயிலில் கிளம்பியவுடன் யார் யார் பக்கத்தில் இருக்கிறார்கள் என்று பார்த்து அனைவருக்கும் டிபன் பாக்ஸ் சாப்பாடு பரிமாறப்படும். அசைவம் சைவம் இரண்டுமே இருக்கும். அங்கு இருக்கிறவர்களுக்கு அப்பவே 100 ரூபாய், அது அப்போது பெரிய தொகை வழங்கப்பட்டு விடும். அப்புறம்தான் எம்ஜிஆர் சாப்பிடுவது வழக்கம். சாப்பிட்ட பிறகு மீதி உணவை தரும் பழக்கம் இல்லாதவர் என்று நடிகர் ராஜேஷ் கூறியிருக்கிறார்.

சற்று முன்