- Advertisement -
திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது, தண்ணீர் இல்லாமல் டெல்டாவில் பயிர்கள் கருகுகின்றன. இந்த நிலை ஏற்படும் என்பதால் உடனே நடவடிக்கை தேவை என 2 முறை இந்த சர்க்கஸ் அரசை எச்சரித்தோம். எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை ஏற்காத அரசின் வெட்டி ஈகோ வால் விவசாயிகள் துயரில் நிற்கின்றனர். முழு பயிர் கடன் தள்ளுபடி என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றியபோல் இப்போதும் ஏமாற்றக் கூடாது. பயிர் சேதம் தொடர்பாக வெளிப்படையான கள ஆய்வை இந்த அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் கவலையில் கன்டென்ட் எதுவும் தேறுமா என பார்க்காமல் அவர்களின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.





