- Advertisement -
இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித்குமார் தயாரிப்பில் நடிகர் விஷால் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்தார். இந்த படத்தில் நடிகர் விஷாலுக்கு நேரடியாக சம்பளம் பேசாமல் பிராபர்டி ஷேர் – லாபத்தில் பங்கு அடிப்படையில் சம்பளம் என பேசப்பட்டு இருந்தது. இதற்கிடையே ரூ. 50 லட்சம் முன்பணமாக விஷால் தயாரிப்பாளர் லலித்குமாரிடம் கேட்டதாகவும் அதற்கு அவர் மறுத்துவிட்டு 1 நாள் ஷூட்டிங் வராவிட்டால் ரூ. 25 லட்சம் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்றும் விஷாலுக்கு கண்டிசன் போட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் டிராப் செய்யப்பட்டு விஷால் வெளியேறிவிட்டதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





