தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகியாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. அவருக்கு ஐதராபாத்தில் உள்ள ஹூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஆடம்பர பங்களா உள்ளது. அங்குதான் பல ஆண்டுகளாக அவர் வசித்து வந்தார். இதுதவிர ஐதராபாத்தில் அவருக்கு பண்ணை வீடு உள்ளிட்ட சில சொத்துக்களும் உள்ளன. இந்த நிலையில் அனுஷ்கா தற்போது ஐதராபாத்தை விட்டு வெளியேறி தனது சொந்த ஊரான பெங்களூருவில் நிரந்தரமாக குடியேற திட்டமிட்டுள்ளார். அதனால் ஐதராபாத்தில் உள்ள அவரது சொத்துக்களை விற்பதாக தகவல் பரவி வருகிறது. மேலும் அவர் தெலுங்கு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த பல மாதங்களாகவே பொதுவெளியில் தலை காட்டாமல் இருக்கும் நடிகை அனுஷ்கா புதிய படங்கள் எதுவும் கமிட் ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் ஐதராபாத்தை விட்டு வெளியேறி பெங்களூரில் குடியேறும் அவர் இனி தெலுங்கு சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்ற தகவல் அவரது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.





