- Advertisement -
நேர்காணல் ஒன்றில் பேசிய நாடோடி பட நடிகர் பரணி கூறியதாவது, கிட்டதட்ட 1400 வருடம் பழமையான சிவன் கோவில். சிவன் ஒவ்வொரு ஊர்லயும் ஒரு பேர்ல இருப்பார். இங்கே இருக்கிற சிவன் பேர் ஸ்ரீ வர முக்தீஸ்வரர். வரமும் கொடுப்பார் முக்தியும் அடைய வைப்பார். அவ்வளவு சிறப்பான ஒரு ஸ்தலம். கோவில் ரொம்ப சிதிலமடைந்து இருந்தது. ஊர்மக்கள் நாங்கள் எல்லாம் சேர்ந்து புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தினோம். சினிமா வாய்ப்பு இல்லாம பண ரீதியா ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருந்தேன். இப்போ தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்துகிட்டே இருக்கு. தொழில் ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் ரொம்ப சிறப்பா இருக்கு என்று நடிகர் பரணி மகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





