- Advertisement -
Homeபொழுதுபோக்குஒன்றரை லட்சம் தமிழர்கள் அழிக்கப்பட்டனர், டெத் ரயில்வே படத்தின் கதைக்களம் இதுதான் - இயக்குனர் தரணி...

ஒன்றரை லட்சம் தமிழர்கள் அழிக்கப்பட்டனர், டெத் ரயில்வே படத்தின் கதைக்களம் இதுதான் – இயக்குனர் தரணி ராசேந்திரன் தந்த அப்டேட்ஸ்!

- Advertisement -

யாத்திசை பட இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் டெத் ரயில்வே என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சசிகுமார் சமுத்திரக்கனி கிஷோர் அசோக் செல்வன் கௌரி சேயோன் பவானி ஸ்ரீ ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இந்த படம் குறித்து இயக்குனர் தரணி ராசேந்திரன் கூறியதாவது, 1944ம் ஆண்டில் ஜப்பானிய படைகள் பர்மா வழியாக இந்தியாவை நோக்கி முன்னேறிய காலகட்டத்தை பின்னணியாக கொண்டது இந்த படம். 2ம் உலகப்போர் தீவிரமடையும்போது ஜப்பான் பர்மா நாகலாந்தை ஆக்கிரமித்து இந்தியாவின் நோக்கி முன்னேறியது. அவர்கள் தங்கள் ஆயுதம் மற்றும் போக்குவரத்துக்காக ரயில்வே வழியை அமைத்தனர். அந்த ரயில் பாதை அமைக்க தமிழர்களும் கூலிகளும் அவர்களிடம் பிடிபட்ட வீரர்களும் பணியாற்றினர். அந்தப் பாதை அமைக்கும் போது நோய்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒன்றரை லட்சம் தமிழர்கள் பலியானதாக வரலாறு சொல்கிறது. ஆனால் உண்மையில் எத்தனை பேர் இறந்தனர் என்பது கணக்கில்லை. அந்தக் கதைதான் இப்போது இந்த படமாக உருவாகிறது என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்