விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். கடந்த வாரம் இத்திரைப்படத்திற்காக ஒரு பிரம்மாண்டமான பாடல் காட்சியை படக்குழு உருவாக்கி வருவதாக தகவல் வெளிவந்தது.

அந்த பாடலில் 2000 டான்சர்கள் நடனமாடி வருகிறார்கள் எனவும் இப்பாடல் வேற லெவல் குத்துப்பாடலாக உருவாகி வருவதாகவும் செய்திகள் வெளிவந்தன. மேலும் இப்பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்பாடல் குறித்தான ஒரு மாஸ் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ஒரு முக்கியமான காட்சியின் பின்னணியில்தான் அந்த பாடலே வருகிறதாம். இத்திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்து வருவதை நாம் அறிந்திருப்போம்.

சஞ்சய் தத் மிகப்பெரிய கேங்க்ஸ்டராக நடித்து வருகிறார். அவர் தனது பாடி கார்டுடன் அறிமுகமாகும் காட்சியில்தான் இப்பாடல் இடம்பெறவுள்ளதாம். சஞ்சய் தத் இவ்வாறு என்ட்ரி கொடுக்க அவரை வரவேற்கும் விதமாக விஜய், அர்ஜூன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடனமாடுகிறார்களாம். இந்த காட்சியின் பின்னணியில்தான் அந்த பாடலே இடம்பெறுகிறதாம். தற்போது இப்படி ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
“லியோ” திரைப்படம் ஒரு பக்காவான கேங்கஸ்டர் திரைப்படமாக உருவாகி வருவதாக தெரிய வருகிறது. இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க செவன் ஸ்கிரீன் எஸ் எஸ் லலித் குமார் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.





