- Advertisement -
முன்னாள் தமிழக முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது, ஒரு மாவட்டத்தின் டிஸ்ட்ரிக்ட் மேஜிஸ்திரேட் ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கு இழைக்கப்பட்ட இந்த பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எத்தனை உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு, தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்து அமைச்சர், எம்எல்ஏ பாவம் என்று முட்டுக்கொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் என வெளியில் தெரிந்தே இத்தனை அழுத்தங்கள் வந்தும் திடமாக நின்று ஆட்சியர் புகார் அளித்துள்ளார் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.





