- Advertisement -
நெல்லையில் நேற்று இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை தொடங்கப்பட்ட விவகாரத்தில் அனிருத் காவ்யா ரிசப்ஷனுக்கு தனியாக சென்ற முதல்வர் விஜயை வம்பு இழுத்து திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் செய்த நக்கலான பதிவு இப்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. என்னை கழட்டி விட்டுட்டா கல்யாணத்துக்கு போறே? இனி ருத்ர தாண்டவத்தை நீ பார்ப்பே என்று திரிஷா கூறுவது போல் அதில் பதிவிட்டு கலாய்த்திருக்கிறார். மேலும் பேரவையை தொடங்கியவர்கள் ஜெயலலிதாவின் ஆளுமை திறன் திரிசாவிடம் உள்ளது. அவரது வழித்தோன்றலாகவே பார்க்கிறோம் என்று பேசியிருப்பதும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.





