- Advertisement -
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த கதையை 12 பேருக்கு மேல் சொல்லியும் அனைவரும் நிராகரித்து விட்டனர். இந்த நிலையில் காலை 7 மணிக்கு கதையை கேட்ட சிவகார்த்திகேயன் உடனே ஓகே சொன்னார். அவரும் வளர்ந்து என்னையும் தூக்கி விட்டார் என்று இயக்குனர் பொன்ராம் ஒரு நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியுடன் இந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார்.





