- Advertisement -
நடிகை வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, இந்த ஆண்டு மயக்க மருந்து இல்லாமல் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்தது போல் வலியாக இருந்தது. எதிர்பாராத முடிவுகளையும் இழப்புகளையும் சந்தித்து மெதுவாக மீண்டும் வருகிறேன். கடவுள் ஏன் என் கதையை இப்படி எழுதினார் என தெரியவில்லை என்றாலும் நீ நிச்சயம் இதில் ஜெயிப்பாய் என்று கடவுள் நம்பிக்கையுடன் தான் எழுதியிருப்பார் எனவும் உருக்கமாக வனிதா விஜயகுமார் பதிவிட்டுள்ளார்.





