- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையபுரட்சித் தலைவியா? நடிகை திரிஷா பேரவைக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் எச்சரிக்கை!

இளையபுரட்சித் தலைவியா? நடிகை திரிஷா பேரவைக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் எச்சரிக்கை!

- Advertisement -

இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை துவங்கப்பட்டுள்ள நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசு. அண்ணன் மகளுமான தீபா ஜெயக்குமார் என்கிற நான் புரட்சித்தலைவி அம்மாவின் பட்டத்தை யார் பயன்படுத்துவதையும் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாட்டின் இரும்பு பெண்மணி ஒரே ஒரு புரட்சித்தலைவி மட்டும்தான். அவருடைய வாரிசு என்ற முறையில் அவரது பட்டத்தை யாரும் தவறாக பயன்படுத்துவதை நான் அனுமதிக்க மாட்டேன். அவரது வாரிசு அண்ணன் மகள் மற்றும் குடும்பத்தினர் என்ற முறையில் இதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். தேவைப்பட்டால் தகுந்த சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று தீபா ஜெயக்குமார் அதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்