- Advertisement -
ஆஸ்கர் விருதுக்கு இணையாக கருதப்படும் எம்மி விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள நடிகர் விஜய் சேதுபதி நியூயார்க் சென்று இருக்கிறார். இதுகுறித்து அவர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறுகையில், சர்வதேச எம்மி விருது விழாவில் கலந்து கொள்வது இதுவே எனக்கு முதல் முறை. மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பின் மூலம் எம்மி மேடையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது உண்மையிலேயே பெருமையாகவும் சிறப்பாகவும் உணர வைக்கிறது. இதற்கு முன்பும் நான் நியூயார்க் வந்திருக்கிறேன். ஆனால் இந்த முறை இதற்காக வருவேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இது முன்கூட்டியே திட்டமிட்ட பயணம் அல்ல. திடீரென அமைந்த ஒரு சர்ப்ரைஸ் என்று விஜய் சேதுபதி மகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





