- Advertisement -
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, தவெக கட்சி ஆட்சிக்கு வந்தது மே 10ம் தேதி. இந்த சம்பவம் ஜூலை மாதமே நடந்திருக்கு. புதுசா அரசு ஆட்சிக்கு வந்தால் அதை ஹனிமூன் பீரியட் என்று சொல்வோம். 6 மாதங்களுக்கு எதுவும் கேட்க கூடாது. ஆட்சியை குறை சொல்லக்கூடாதுன்னு சொல்லுவோம். அப்படி நாம சொன்னதை இந்த எம்எல்ஏ முதலமைச்சர் எல்லாம் அதே அர்த்தத்துல எடுத்துட்டாங்க. சட்டம் ஒழுங்கை கையில் வைத்துள்ள இந்த டம்மி முதலமைச்சர் இத்தனை நாளா தூங்கிட்டு இருந்தாரா? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.





