- Advertisement -
பொன்னியின் செல்வன் கதையில் வரும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை மட்டுமே மையப்படுத்திய ஒரு புதிய கதையை நடிகர் சூர்யாவிடம் இயக்குனர் மணிரத்னம் சமீபத்தில் கூறியிருக்கிறார். தற்போது அதே கதைக்காக மற்றொரு முன்னணி நடிகருடன் மணிரத்னம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் ஏறக்குறைய உறுதியாகி விட்ட நிலையில் ஆரம்ப கட்ட பணிகளில் உள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





