- Advertisement -
நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சதீஷ் கூறியதாவது, நான் பணரீதியாக ரொம்ப கஷ்டப்பட்டு இருந்த டைம்ல எனக்கு ஒரு முக்கியமான ஆபரேஷன் பண்ண வேண்டியதா இருந்துச்சு. அந்த நேரத்துல சத்தியமா என்கிட்ட காசு இல்லே. என்ன பண்றதுன்னு தெரியாம சில பேர் கிட்ட கடனா கேட்டேன். ஆனா கிடைக்கலே. இதை தெரிஞ்சுக்கிட்டு ஜீவி ( பிரகாஷ்குமார்) மச்சான் வந்து இதை வச்சுக்கோ அப்படின்னு அவ்வளவு பெரிய தொகை கொடுத்தான். கொடுத்துட்டு மச்சான் இதனை திருப்பி தர வேணாம்ன்னு சொன்னால் ஆனா பணத்தை திருப்பிக் கொடுக்கற நிலைமையில் அன்னைக்கு நான் இல்லை. அவ்வளவு நல்ல மனசு மச்சானுக்கு என்று கூறியிருக்கிறார்.





