- Advertisement -
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தான் சிங்கப்பெண் அதிரடி படையை உருவாக்கினார்கள். அந்த படை எங்கே போச்ச என்றே தெரியலை. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருக்கே இந்த நிலமை? மத்தவங்களை எங்கே போய் காப்பாத்த போறாங்க? எல்லாம் விளம்பர அரசியல். ரீல்ஸ் அரசியல். நிஜமாக எதுவுமே நடக்காது. ஊடகங்கள் பத்திரிகைகள் கோவித்துக்கொள்ள கூடாது. பத்திரிகை ஊடகங்கள்தான் தான் விஜயை ஒரு பெரிய தலைவர் போல சித்தரித்து காட்டுகிறதே தவிர உண்மை நிலை அதுவல்ல. அந்த போதையில்தான் இந்த அரசாங்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதை புரிந்துக்கொண்டு செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.





