- Advertisement -
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அப்பா ரவிச்சந்திரன் நீண்டகாலமாக தமிழ் சினிமாவில் இருப்பவர். பல படங்களில் உதவி இயக்குனராக பணி செய்தவர். ஆதிக் இயக்கிய படங்களிலும் அவர் அசோசியேட் டைரக்டராக பணி செய்திருக்கிறார். இந்த நிலையில் தன் அப்பாவை இயக்குனராக்கி ஆதிக் அழகு பார்க்கிறார். ரவிச்சந்திரன் இயக்கும் இந்த புதிய படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதுபவர் ஆதிக் தான். இந்த படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கும் இந்த படத்துக்கு கண்ட்ரிபெஃலோ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.





