- Advertisement -
இன்று நேர்காணல் ஒன்றில் பேசிய டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகை காயத்ரி ரகுராம் கூறியதாவது, கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் விஜய் கத்தியா மூவ் பண்ணவில்லை. யாராக இருந்தாலும் பெண்கள் பாதுகாப்பில் காம்பரமைஸ் கிடையாது. கடுமையான உறுதியான நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்ன அவர் 4 மாதங்களாக வாயே திறக்கவில்லை. எந்த நடவடிக்கையும் எந்த எம்எல்ஏ மீது எடுக்கவில்லை. தவறு செய்தவர்களை சும்மா விடமாட்டேன். யாராக இருந்தாலும் என்று சொன்னார். அந்த எம்எல்ஏவை ரிசைன் செய்ய வைத்திருக்க வேண்டும். அங்குதான் ஹீரோயிசம் நிற்கும். ஜூலை மாதம் நடந்த பிரச்னைக்கு இன்று வரைக்கும் ஒரு தீர்வு கிடைக்கலே என்றால் இது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து? என்று நடிகை காயத்ரி ரகுராம் ஆவேசமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.





