- Advertisement -
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படம் வருகிற டிசம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதியிடம் முதல்வர் விஜயின் 6 மாத கால ஆட்சி எப்படி உள்ளது? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகர் விஜய் சேதுபதி கூறுகையில், விஜய் சாரை எனக்கு ஒரு நடிகராக தான் பிடிக்கும். நான் அவரோடு சினிமாவில வேலை செஞ்சிருக்கேன். அரசியல்ல அவர் போடுற திட்டங்களும் என்ன செயல்படுத்த போறாங்க, அதையெல்லாம் நான் உட்கார்ந்து பார்க்கிறது இல்லை. அது என்னோட வேலை இல்லை. எனக்கு வேற வேலைகள் இருக்கு. அதை நான் பார்த்துட்டு இருக்கேன் என்று நடிகர் விஜய்சேதுபதி நெத்தியடியாக பதில் கூறியிருக்கிறார்.





