- Advertisement -
நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மகாநதி சங்கர் கூறியதாவது, நான் முதல் முதலாக அஜீத்குமாரை பார்த்து 1994ல் நேரில் பார்த்தேன். 22 வருஷம் கழித்து மறுபடியும் இப்போ பார்த்திருக்கோம் சார் என்று சொன்னேன். படத்தோட கேமரா மேன் கூப்பிட்டு, சார் இவர்தான் என்னை முதல் தடவை தல என்று கூப்பிட்டார் என்று சொல்லி என்னை பெருமையா பேசினார். நான் அவரை தல என்று சொன்னதை அவர் இன்னும் மறக்கலே. அதை நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு. அன்னைக்கு எப்படி இருந்தாரே இன்னைக்கும் அதைவிட தங்கம் மாதிரி இருக்கிறார் என்று நடிகர் மகாநதி சங்கர் கூறியிருக்கிறார்.





