- Advertisement -
லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் டி 56 திரைப்படத்தில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் மாற்றப்பட்டுள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. டி56 படத்தில் பணியாற்றி வந்த தினேஷ் புருஷோத்தமனுக்கு பதிலாக நடிகர் தனுஷின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம், நடிகர் தனுஷின் சிபாரிசாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.





