- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது, உலகப் புகழ்பெற்ற நடிகர்கள் கூட அவர்களின் பட பிரமோசன்களுக்கு நேரில் வருகிறார்கள். நடிகர் அஜீத்குமார் நடிகை நயன்தாரா இருவரும் வருவதில்லை. அவர்களுக்கு தலையில் பெரிய கிரீடம் இருப்பதாகவும் அப்படி போகாமல் இருப்பது ஒரு கெத்து என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அது மார்க்கெட்டை கீழே கொண்டு போய்விடும். இப்படியே வராமல் இருந்தால் சினிமாவை விட்டே காணாமல் போய்விடுவார்கள் என்று திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருக்கிறார்.





