- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி சொந்த படம் எடுத்தால் மட்டுமே அந்த ஹீரோவும் ஹீரோயினும் சினிமாவில் இருக்க முடியும் -...

இனி சொந்த படம் எடுத்தால் மட்டுமே அந்த ஹீரோவும் ஹீரோயினும் சினிமாவில் இருக்க முடியும் – பிரபலம் போட்டுடைத்த உண்மை!

- Advertisement -

நேர்காணல் ஒன்றில் பேசிய தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது, ஆரம்பத்தில் இருந்தே அஜீத்குமார் நயன்தாரா இருவரை பற்றிய நிறைய விமர்சனங்களை சொல்லி இருக்கிறேன். 100 கோடி 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்க மட்டும் தெரிகிறது. ஆனால் பிரமோசனுக்கு வந்து அவர்களது தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்து கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை. அவர்கள் சொந்த படம் எடுக்கும் போது மட்டும் நயன்தாரா பிரமோசனுக்கு சென்று நிற்கிறார். அஜீத் குமார் அவரது டேர்டெவில் படத்தின் பூஜைக்கு கூட வரவில்லை. ஆனால் பிரமோசனுக்கு வருவார் பாருங்கள். விளம்பரங்களில் நடிக்க மட்டும் செல்கிறார். இப்போது அவரை வைத்து படம் எடுக்க யார் முன் வந்தது? யாரும் வரவில்லையே. சொந்த படம்தானே எடுக்கப்படுகிறது. நயன்தாராவும் இப்படியே சென்றால் அவரும் சொந்த படம் மட்டும் தான் எடுக்க முடியும் என்று திருப்பூர் சுப்ரமணியன் கோபமாக பேசியிருக்கிறார்

சற்று முன்