- Advertisement -
ரெட்ரோ படத்துக்கு பிறகு புலி ஆட்டத்தை மையமாகக் கொண்டு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர்கள் அதர்வா பிரபுதேவா கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்டோ நடித்து வருகின்றனர். ஏற்கனவே படப்பிடிப்பு துவங்கிய நிலையில் கொடைக்கானலில் 3 நாள் படப்பிடிப்பு மற்றும் டிசம்பர் 20 முதல் சென்னையில் நீண்ட நாள் படப்பிடிப்புக்குப் பிறகு இந்த படம் நிறைவடைய உள்ளது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இளம் நடிகர் அதர்வாவுக்கு இந்த படம் நல்ல கம்பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





