- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியிடம் மரியாதையின்றி பேசிய புதுமுக நடிகை - கதிகலங்கிப் போன படக்குழுவினர்

ரஜினியிடம் மரியாதையின்றி பேசிய புதுமுக நடிகை – கதிகலங்கிப் போன படக்குழுவினர்

- Advertisement -

தமிழ் சினிமாவில், ரஜினிகாந்த் அனைவராலும் மிகவும் மரியாதையாக நடத்தப்படுபவர். அதேபோல், வயதில் சிறியவர்களிடம் கூட மிக மரியாதையாக நடந்துகொள்பவர் ரஜினிகாந்த். சமீபத்தில், ஜெயிலர் படப்பிடிப்பின் போது கூட, படத்தின் இயக்குநர் நெல்சன் வந்த போதெல்லாம், எழுந்து நின்று மரியாதை தந்தவர் ரஜினி என்று, பலராலும் பாராட்டப்பட்டவர்.

அப்படிபட்ட ரஜினிகாந்தை ஒரு புதுமுக நடிகை, படப்பிடிப்பு தளத்தில் ஓகே போடா என்று சொல்லி இருக்கிறார். அதைக்கேட்ட ரஜினி, சிரித்துக்கொண்டே சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதை சம்பந்தப்பட்ட அந்த நடிகையே இப்போது வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியில் இருந்து அப்போதுதான், நான் தமிழ் சினிமாவுக்கு வந்து இருக்கிறேன். அப்போது எனக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. தர்மத்தின் தலைவன் என்ற படம், ரஜினி, பிரபுவுடன் முதன்முறையாக நடிக்கிறேன். ஷூட்டிங் ஸ்பாட்டில், மற்றவர்கள் எல்லாம் வாடா, போடா என்றுதான் பேசிக்கொண்டனர். அதனால், தமிழ் மொழி தெரியாததால், அதுதான் மரியாதை என்று நினைத்துக்கொண்டேன்.

ஒருநாள் ஷூட்டிங் முடிந்து ரஜினி கிளம்பும்போது, என்னிடம் குட்பை சொன்னார். அப்போது, ஓகே போடா என்று சத்தமாக, அவரிடம் சொன்னேன். அதை பார்த்து அங்கிருந்த அனைவரும் பயந்துபோய் விட்டனர், என்னை அதிர்ச்சியாக பார்த்தனர். அவர்களது முகமே மாறிவிட்டது. ஆனால், ரஜினி எதுவும் சொல்லாமல் சிரித்தபடி போய்விட்டார்.

- Advertisement -

அப்போதுதான், அங்கு வந்த நடிகர் பிரபு, அப்படி பேசுவது மரியாதைக்குறைவானது என்று எனக்கு சொல்லிக்கொடுத்தார். தமிழ் மொழி கற்றுக்கொள்ள டிரைவர், லைட்பாய், புரொடக்‌ஷன் ஆட்கள் ஆகியோரிடம் சகஜமாக பேச வேண்டும். தமிழில் ஆட்டோகிராப் போட்டால்தான், ரசிகர்கள் மனதில் எளிதில் இடம் பிடிக்க முடியும், என்றார்.

மீண்டும் ரஜினியை பார்த்த போது, நான் அப்படி மரியாதையின்றி பேசியதற்காக ஸாரி சொன்னேன். ஆனால், அவர் சிரித்தார். அப்போது முதல், இப்போது அண்ணாத்தே படம் வரை அவரை பார்க்கிறேன். மிகப்பெரிய பண்பாளர் அவர், ஒருநாள் அண்ணாத்தே ஷூட்டிங்கில் 5 நிமிடம் தாமதமாக வந்ததற்கு, அங்கிருந்த அனைவரிடமும் 10 முறையாவது ஸாரி சொல்லி இருப்பார். ரெஸ்ட் ரூம் போவதாக இருந்தால் கூட, டைரக்டரிடம் சொல்லாமல் கேரவனுக்கு போக மாட்டார். டைரக்டர் ஓகே சொல்லாமல், அங்கிருந்து வீட்டுக்கு கிளம்ப மாட்டார் என சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சொல்லி இருக்கிறார் நடிகை குஷ்பு.

- Advertisement -

சற்று முன்